என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நியூசிலாந்து துப்பாக்கி சூடு"
நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் 2 மசூதிகளில் கடந்த மார்ச் 15-ந்தேதி துப்பாக்கி சூடு நடந்தது. அதில் 50 பேர் உயிரிழந்தனர். பலர் காயத்துடன் உயிர் தப்பினர்.
அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பியவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இங்கிலாந்து இளவரசர் வில்லியம் நியூசிலாந்து சென்றார்.
நேற்று மதியம் கிறிஸ்ட் சர்ச்நகரை சென்றடைந்த அவர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுபவர்களை சந்தித்தார்.
குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஆலன் அல்ஸ்டாமி என்ற 5 வயது சிறுமியை சந்தித்து அவளிடம் உடல் நலம் விசாரித்தார்.
அப்போது அவள் இளவரசர் வில்லியமிடம் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? என கேட்டார். அதற்கு அவர் ஆம். எனக்கு ‘சார்லோட்’ என்ற மகள் இருக்கிறாள். அவளுக்கும் உனது வயதுதான் இருக்கும் என பதில் அளித்தார்.
தனது 93 வயது பாட்டி ராணி எலிசபெத்தின் வேண்டுகோளின் படி இங்கு வந்து துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக அவர் தெரிவித்தார். அவருடன் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர் டெர்னும் உடன் வந்து இருந்தார். #Christchurchattack #PrinceWilliam
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த 15-ம் தேதி தொழுகை நடைபெற்றபோது, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடந்தபோது, அந்த மசூதிக்கு வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக, மறுநாள் நியூசிலாந்து அணியுடனான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரத்து செய்தது. பின்னர் வங்கதேச வீரர்கள் நாடு திரும்பினர்.
நியூசிலாந்து தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக தப்பிய கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர் மெஹதி ஹசன். இவர் தன் காதலி ரபேயா அக்தர் ப்ரீத்தியை வங்க தேசத்தில் உள்ள குல்னா பகுதியில் கடந்த வியாழன் அன்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘எனது வாழ்க்கையின் புதிய பகுதியை நான் துவங்குகிறேன். என்னை அனைவரும் வாழ்த்துங்கள்’ என கேட்டுக்கொண்டார்.
இதேபோல் கிரிக்கெட் வீரர் முஸ்தபீர் ரஹ்மானும் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். தன்னை தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து திருமணம் மீட்டெடுக்கும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #NewZealandCricketer #MehadihasanMarriage
நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மந்திரி சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று ஜெசிந்தா கூறியிருப்பதாவது:
இவ்வாறு அவர் கூறினார். #MosqueShooting #NewZealandShooting #JesindaAndern
நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் 15ம் தேதி தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த மனித தன்மையற்ற செயலுக்கு பல்வேறு நாட்டினரும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்த ஊழியர் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில், நியூசிலாந்து தாக்குதல் குறித்து கொண்டாடும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார்.
முதலில் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் இதனை அறிந்த அந்த நிறுவனத்தின் தலைவர் அவரை பணியில் இருந்து நீக்கினார். மேலும் அந்த ஊழியர் துபாயை விட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். #MosqueShooting #NewZealandShooting #Mansuspended
இந்நிலையில், நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த ஒசைர் காதரின் குடும்பத்தினரை தெலுங்கானா உள்துறை மந்திரி முகமது மஹ்மூத் அலி சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஒசைர் காதரின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதி உள்ளார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அகமது இக்பால் ஜகாங்கிரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் ஐதராபாத்தைச் சேர்ந்த பர்ஹாஸ் அசன் என்பவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களின் குடும்பத்தினர் ஏற்கனவே நியூசிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #NewZealandAttack #TelengaHomiMinister
நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பிரதமர் ஜெசிந்தா தலைமையில் சிறப்பு பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்திலேயே, அரபு மொழியில் வணக்கம் கூறிவிட்டு ஜெசிந்தா பேச துவங்கினார். இதில் அவர் பேசியதாவது:
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில், நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #MosqueShooting #NewZealandShooting #JesindaAndern
நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளி தன்னை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த "பிரெண்டன் டாரன்ட்" என்று டுவிட்டரில் அடையாளம் காட்டினான். அத்துடன், 73 பக்கத்தில் தனது நோக்கங்களை தெரிவித்து இருந்தான்.
மேலும் ஆன்லைன் கேம்களில் வருவதைப் போல டாரன்ட், துப்பாக்கியினால் மக்களை கொன்று குவித்த வீடியோவினை நேரலையாக வெளியிட்டிருந்தான். இதனை கண்ட உலகின் பல்வேறு நாடுகளின் அரசும், மக்களும் கொதித்தெழுந்து, கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து பேஸ்புக் நிறுவனத்தின் நியூசிலாந்து செய்தி தொடர்பாளர் மியா கார்லிக் கூறியதாவது:
இந்த வீடியோ, இணையப்பக்கத்தில் பகிரப்படுவதை தடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென தனியாக ஒரு குழு, சிறந்த தொழில்நுட்பத்துடன் முழுவதும் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் 1.5 மில்லியன்(15 லட்சம்) வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் பேஸ்புக் ஊழியர்கள் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #FacebookRemoved #MosqueShootingvideo #NewZealandShooting
நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பர்ஹாஜ் அஷான், கரீம்நகரைச் சேர்ந்த முகமது இம்ரான் கான், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒசைர் காதர் உட்பட 8 இந்தியர்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்ட்சர்ச்:
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்குவதாக இருந்தது.
இந்த நிலையில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட இந்த சம்பவத்தில் 49 பேர் பலியானார்கள். தொழுகைக்காக திரண்டு இருந்த போது இந்த பயங்கர சம்பவம் நடந்தது. வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் தொழுகைக்காக அந்த மசூதிக்கு சென்றனர். நல்ல வேளையாக அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். இதை தொடர்ந்து 3-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வங்காளதேச பேட்ஸ்மேன் தமிம் இக்பால் கூறியதாவது:-
இந்த சம்பவத்தில் வங்காள தேச வீரர்கள் அனைவருமே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். என்னால் இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. நாங்கள் அனைவரும் தற்போது ஓட்டலில் நலமாக உள்ளோம்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம்தான் நாங்கள் இருந்தோம். இது ஒரு மோசமான பயங்கரம் நிறைந்த அனுபவம் ஆகும். எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #NZMosqueAttack #tamimiqbal
துப்பாக்கி சூடு குற்றவாளி, "ப்ரெண்டான் டாரன்ட்" என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டி உள்ளான்.
இந்நிலையில் இந்திய தூதர் சஞ்சீவ் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சம்பவம் தொடர்பாக பல்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் படி, இந்தியா மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேர் மாயமானதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனது. மனிதர்களுக்கு எதிராக மாபெரும் குற்றம் அரங்கேறியுள்ளது. நாங்கள் அவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து பிரார்த்திக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். #MosqueShooting #NewZealandShooting #IndiansMissing
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்